search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    34 பேர் எங்கே? சசிகலா அணியில் 94 எம்.எல்.ஏ.க்கள்: கணக்கெடுப்பில் தகவல்
    X

    34 பேர் எங்கே? சசிகலா அணியில் 94 எம்.எல்.ஏ.க்கள்: கணக்கெடுப்பில் தகவல்

    சசிகலா அணியில் 94 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இன்னும் 34 எம்.எல்.ஏ.க்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து விவரமான விளக்கம் தெரியவில்லை.

    சென்னை:

    சசிகலாவை ஆதரிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விடுதி பகுதிக்கு செல்ல முடியாதபடி சசிகலா தரப்பினர் பலத்த அரண் அமைத்துள்ளனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் உள்பகுதிக்குள் இருப்பதால் அங்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாமல் இருந்தது. 128 எம்.எல்.ஏ.க்கள் அங்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று அந்த சொகுசு விடுதிக்கு சென்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணை முடிவில் கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 94 பேர் மட் டுமே இருப்பது தெரியவந்துள்ளது. வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் இதை உறுதி படுத்தினார்கள்.

    எம்.எல்.ஏ.க்களிடம் நடத்திய விசாரணையை வருவாய் துறையினர் அறிக்கையாக தயார் செய்து வருகிறார்கள். நாளை அந்த அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    அ.தி.மு.க.வின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 135 பேரில் 6 பேர் ஓ.பி.எஸ். அணியில் உள்ளதால் 129 பேர் சசிகலா அணியில் இருக்க வேண்டும். ஆனால் வருவாய் துறையினர் கணக்கெடுப்பில் 94 பேரே உள்ளனர். எனவே மீதமுள்ள 35 எம்.எல்.ஏ.க்கள் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த 34 பேரில் 14 பேர் வேறொரு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் பார்த்தாலும் 21 எம்.எல்.ஏ.க் கள் என்ன ஆனார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதாக தெரிகிறது.

    Next Story
    ×