என் மலர்

    செய்திகள்

    மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி வீடு எரிந்து நாசம் பீரோ, கட்டில் சேதம்
    X

    மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி வீடு எரிந்து நாசம் பீரோ, கட்டில் சேதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மணவாளக்குறிச்சி அருகே ஓலை வீடு தீப்பிடித்து எரிந்ததால் பீரோ மற்றும் கட்டில் சேதம் அடைந்தனர்.
    மணவாளக்குறிச்சி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றுவிளையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இவர்களது வீடு ஓலையால் வேயப்பட்ட குடிசை வீடாகும்.

    நேற்று கோவில் திருவிழாவையொட்டி வீட்டை பூட்டி விட்டு ராமகிருஷ்ணனும், அவரது குடும்பத்தினரும் கோவிலுக்கு சென்றனர். மாலையில் அவர்கள் வீடு திரும்பினார்கள்.

    அப்போது அவரது குடிசை வீடு மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன், சத்தம்போட்டு அலறினார். இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்களும் நாசமானது.

    ராமகிருஷ்ணன் வீட்டில் எப்படி தீப்பிடித்தது, யாராவது தீ வைத்தார்களா? அல்லது விபத்து காரணமாக தீப்பிடித்ததா? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. வீட்டில் ரூ.25 ஆயிரம் பணம் வைத்திருந்ததாகவும், அந்த பணமும் எரிந்து நாசமாகி விட்டதாக ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×