என் மலர்

  செய்திகள்

  பலியான பிரவீன்ஜோதி, பூரணசந்திரன்
  X
  பலியான பிரவீன்ஜோதி, பூரணசந்திரன்

  காரமடை அருகே விபத்து: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரமடை அருகே லாரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
  காரமடை:

  கோவை மேட்டுப்பாளையம் பள்ளேபாளையம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பிரவீன்ஜோதி (வயது 21). ஜவுளி கடை அதிபர்.

  இவரது நண்பர் மோத்தேபாளையத்தை சேர்ந்த நாகராஜனின் மகன் பூரணசந்திரன் (19). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். நேற்று இரவு நண்பர்கள் 2 பேரும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரவின்ஜோதி ஓட்டினார்.

  மேட்டுப்பாளையம் ரோடு தேரம்பாளையம் குடோன் தோட்டம் பஸ் நிறுத்தம் என்ற இடத்தில் வந்தபோது வட மாநிலத்தில் இருந்து வெங்காய லோடு ஏற்றிய லாரி வந்தது.

  எதிர்பாராதவிதமாக லாரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துபார்த்தபோது 2 பேரும் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.

  அவர்களை பொதுமக்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாலிபர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

  இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்.

  Next Story
  ×