என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பனார்கோவில் அருகே பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
    X

    செம்பனார்கோவில் அருகே பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

    மேலமுக்கூட்டில் அ.தி.மு.க. மாணவர் அணி பொறுப்பாளர் வீரமணி தலைமையில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவுகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் அ.தி.மு.க. மாணவர் அணி பொறுப்பாளர் வீரமணி தலைமையில் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவுகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் திரளாக இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டு விளையாட அனுமதி பெற்று தந்தவர் பன்னீர்செல்வம். அவர் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலி தாவின் உண்மையான விசுவாசி நான்கு ஆண்டு நிரந்தர முதலமைச்சராக இருக்க வலியுறுத்தியும், அவருக்கு கட்சியால் மிரட்டல், தொந்தரவு செய்ய கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×