search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகின
    X

    கோத்தகிரியில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகின

    கோத்தகிரியில் உறைபனி பொழிவால் பசுந்தேயிலை செடிகள் கருகியுள்ளன. ஒருபுறம் தேயிலை எஸ்டேட்டுகள் அழிக்கப்பட்டு காட்டேஜூகளாக உருமாறி வருகின்றன.

    கோத்தகிரி:

    கோத்தகிரியில் உறைபனி பொழிவால் பசுந்தேயிலை செடிகள் கருகியுள்ளன. ஒருபுறம் தேயிலை எஸ்டேட்டுகள் அழிக்கப்பட்டு காட்டேஜூகளாக உருமாறி வருகின்றன. மறுபுறம் உறைபனியின் தாக்கத்தால் பசுந்தேயிலை செடிகளை கருகல் நோய் தாக்கி வருகிறது.

    இதனால் பசுந்தேயிலைக்கு விவசாயி களுக்கு போதிய விலை கிடைக்க வில்லை. வருமானம் இழந்த விவசாயிகள் சிரமத்தை எதிர் கொண்டு பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர். இது தவிர கடந்த ஆண்டு களை விட இந்த ஆண்டு கோத்தகிரி பகுதிகளில் பனிப் பொழிவின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.

    குறிப்பாக ஈளாடா, கோடநாடு, சோலூர் மட்டம், அளக்கரை, கட்டபெட்டு, அரவேனு உள்ளிட்ட பல பகுதிகளில் பனிப் பொழிவின் தாக்கம் அதிகம்.

    இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், மழையின்மை, உறைபனி பொழிவால் பல ஏக்கர் பரப்பளவிலான பசுந்தே யிலை தோட்டங் கள் இழப் பால் பாதிக்கப் பட்டுள்ள தேயிலை விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×