என் மலர்

  செய்திகள்

  தேவதானப்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
  X

  தேவதானப்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேவதானப்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தேவதானப்பட்டி:

  தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ளது டி.வாடிப்பட்டி. போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

  இந்நிலையில் கடந்த 3 வார காலமாக தண்ணீர் வரவில்லை. இதனால் இந்த கிராம மக்கள் குடிநீருக்கு அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

  தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்கமாறு அப்பகுதி மக்கள் கிராம நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட கிராமக்கள் இன்று காலை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  அதிகாரிகள் யாரும் வராததால் தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×