என் மலர்
செய்திகள்

ஓட்டேரியில் 4 கடைகளை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை
ஓட்டேரியில் 4 கடைகளை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
ஓட்டேரி கிருஷ்ணதாஸ் ரோட்டில் அரசு பஸ் பணிமனை உள்ளது. நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவற்றில் ஒரு ஆயில் கடையில் மட்டும் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மற்ற 2 மளிகை கடைகள் மற்றும் ஒரு பேக்கரி கடையிலும் பணம் கொள்ளை போனது. அவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம்.
இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸ் உதவி கமிஷனர் கங்கைராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினார். தகவல் அறிந்ததும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மற்றும் தொகுதி தலைவர் ஓட்டேரி ஜோதிராம் உள்ளிட்ட வியாபாரிகள் வந்து பார்த்தனர்.
Next Story