என் மலர்
செய்திகள்

தலித் பெண் படுகொலை: 10-ந்தேதி தேதி காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூரில் தலித் பெண் நந்தினி கொலை செய்யப்பட்டதை கண்டித்து 10-ந்தேதி தேதி காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து போவதாக மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னை:
காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் 10-ந்தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த தலித் பெண் நந்தினி வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார்.
இதை கண்டித்து எஸ்.சி. பிரிவு சார்பில் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மாநில துணைத் தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்குகிறார். மாவட்டத் தலைவர் ரத்தினம் முன்னிலை வகிக்கிறார். மாநில தலைவராகிய நான் கண்டன உரையாற்றுகிறேன்.
நந்தினி படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். தலித்துகள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. மாநில அரசு அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story