என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி
    X

    தாம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி

    தாம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ்காரரும், மற்றொரு விபத்தில் ஆசிரியரும் பலியான சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (24) இவர் வண்டலூர் உம்மனாஞ்சேரியில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்தார்.

    இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார். தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலையில் தாம்பரம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    அண்ணாநகரை சேர்ந்தவர் பாலஅருள் (36) இவர் பெருங்களத்தூர் நெடுகுன் றத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார். பெருங்களத்தூர் நெடுங்குன்றம் சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பாலஅருள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×