என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் அண்ணா வாழ்ந்த வீட்டில் அமைச்சர்- கலெக்டர் மரியாதை
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சின்ன காஞ்சீபுரத்தில் நினைவிடமாக உள்ள அவர் வாழ்ந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ள திருஉருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
காஞ்சீபுரம்:
முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சின்ன காஞ்சீபுரத்தில் நினைவிடமாக உள்ள அவர் வாழ்ந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ள திருஉருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
சின்ன காஞ்சீபுரத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத். பா.கணேசன் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மைதிலி திருநாவுக்கரசு, வி.சோமசுந்தரம், கே.யு.எஸ். சோமசுந்தரம். வள்ளிநாயகம், விஸ்வநாதன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் திரளானோர் காஞ்சீபுரம் காந்தி சாலை பெரியார் நினைவுத்தூண் பகுதியில் இருந்து அமைதி ஊர்வலமாக காஞ்சீபுரம் நகரமன்ற அலுவலகம் வரை சென்றனர். பின்னர் அங்கு அண்ணாதிருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ, எழிலரசன் எம்.எல்.ஏ, சன்பிராண்ட் ஆறுமுகம், பொன்மொழி, சிவிஎம். அ.சேகர், வி.எஸ். ராமகிருஷ்ணன், பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் வளையாபதி தலைமையில் ஏராளமானோர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. சார்பில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சாட்சி சண்முக சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போன்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Next Story