என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆணவ படுகொலைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆணவ படுகொலைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    ஆணவ படுகொலைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.
    கடலூர்:

    பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆணவப் படுகொலைகளை கண்டித்து கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று நடைபெற்றது.

    கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் அஸ்கர் அலி, திராவிடமணி, தொகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, வெற்றிச் செல்வன், ஆதித்தகரிகாலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் புதியவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் நகர செயலாளர் செந்தில் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொது செயலாளர் சிந்தனை செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், கடலூர் பாரளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் பேசினர்.

    நிர்வாகிகள் ஆதி குடியரசு, காத்தவராயன், பிரதீப், முருகன், பன்னீர்செல்வம், கிட்டு, குருமூர்த்தி, கோபாலன், இமானுவேல், இளம்பிறை, இடிமுரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் முதுநகர் செயலாளர் சேதுராமன் நன்றி கூறினார்.
    Next Story
    ×