search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை இணைக்கக்கோரி வழக்கு
    X

    ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை இணைக்கக்கோரி வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை இணைக்கக்கோரி தொடந்த வழக்கில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த கார்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் நீக்கப்பட்டதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியானது. பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இல்லாமலேயே இயக்கப்படுகிறது.

    பொதுப்பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அந்த இருக்கைகள் போலீசார், அரசு அதிகாரிகள் போன்றவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி, மீண்டும் சம்பந்தப்பட்ட ரெயில்களில் சிறப்பு பெட்டிகளை இணைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த மனு குறித்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 
    Next Story
    ×