என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் கட்டிட மேஸ்திரி வங்கி கணக்கில் ரூ.47 ஆயிரம் மோசடி
    X

    சீர்காழியில் கட்டிட மேஸ்திரி வங்கி கணக்கில் ரூ.47 ஆயிரம் மோசடி

    சீர்காழியில் கட்டிட மேஸ்திரி வங்கி கணக்கில் ரூ. 47 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி திருக்கோலக்கா தெருவை சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி (51). கட்டிட மேஸ்திரி. நேற்று இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர், உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும். பின் நம்பர் கொடுங்கள் என கேட்டு உள்ளார். அதன்படி முத்துக் குமாரசுவாமியும் பின் நம்பரை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் அவரது செல்போனுக்கு ரூ. 47 ஆயிரம் எடுத்ததாக தகவல் வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு சென்று விசாரித்த போது அவரது ஏ.டி.எம். பின் நம்பரை பயன்படுத்தி மர்ம ஆசாமி பணம் எடுத்தது தெரிய வந்தது.

    இது குறித்து முத்துக்குமார சுவாமி சீர்காழி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×