என் மலர்
செய்திகள்

பவானியில் கேரள அரசு அணை கட்டுவதை மத்திய அரசு அனுமதிக்காது: தமிழிசை சவுந்தரராஜன்
பவானியில் கேரள அரசு அணை கட்டுவதை மத்திய அரசு அனுமதிக்காது என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு பற்றி தவறான கருத்துகள் உள்ளன. இந்த தேர்வை எழுதும்போது தான் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இந்தியா முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வுபோல் இந்த தேர்வும் அமையும். நீட் தேர்வை தி.மு.க. எதிர்க்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் அவர்களால் சமமான கல்வியை கொடுக்கவில்லை.
நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தமிழில் எழுதலாம். கிராமப்புற மாணவர்கள் முயற்சி செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்கள் கூட தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரமுடியும். மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு அவர்களுக்கு கிடைக்கும். இதனால் பலன் இருக்கும்.
பவானியில் கேரளா அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நடக்காது. முல்லைப்பெரியாறு, மேகதாது, சிறுவாணி ஆகியவற்றில் அணை கட்டும்போது மத்திய அரசு ஆதரவு தரவில்லை. பவானியில் அணை கட்டுவதை கேரளா அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மெரினாவில் ஒரு போராட்டம் நடந்துள்ளது. இதனால் அங்கு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அங்கு பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி செல்பவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
ஜல்லிக்கட்டிற்கு குடியரசு தலைவர் அனுமதி வழங்கி உள்ளார். குடியரசு தலைவருக்கு செல்லும் முன் 4 மத்திய மந்திரிகள் கையெழுத்து போட்டு உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாளை முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பிக் கொண்டு இருக்கிறது.
மன்மோகன்சிங், சிதம்பரம் போன்றவர்கள் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று இருப்பதாக கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த பொருளாதாரத்தை பிரதமர் மோடி தற்போது உயர்த்தி வருகிறார். மன்மோகன்சிங், சிதம்பரம் போன்றவர்களின் பேச்சுகளை மக்கள் நம்பமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story