என் மலர்

  செய்திகள்

  மானாமதுரை அருகே பாம்பு கடித்து விவசாயி பலி
  X

  மானாமதுரை அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மானாமதுரை அருகே வயலுக்கு சென்ற விவசாயியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  மானாமதுரை:

  மானாமதுரை அருகே உள்ள ஆலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 68). விவசாயியான இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.

  நேற்று மாலை ராமகிருஷ்ணன் தனது வயலுக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவரது நிலைமை மோசமானதால் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தனர்.

  இது குறித்த புகாரின் பேரில் மானாமதுரை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×