என் மலர்

  செய்திகள்

  பல்லாவரம் அருகே ஆசிரமம் மீது பெண் பாலியல் புகார்
  X

  பல்லாவரம் அருகே ஆசிரமம் மீது பெண் பாலியல் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லாவரம் அருகே ஆசிரமத்தில் ஆபாச படம் எடுப்பதாக பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தாம்பரம்:

  பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வினாயகர் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு 68 குழந்தைகள் தங்கியுள்ளனர். அவர்களில் 42 பேர் சிறுவர்கள், 24 பேர் சிறுமிகள்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஆசிரமத்தில் இருந்து ரோட்டில் ஓடி வந்தார். அவரை 4 பேர் விரட்டி வந்து பிடித்தனர்.

  அப்போது, ‘ஆசிரமத்தில் தன்னை பலவிதமாக ஆபாச படம் எடுப்பதாக பொது மக்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து சங்கர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  உடனே விரைந்து வந்த போலீசார் ஆசிரமத்துக்கு சென்று அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவரது பெயர் சுகன்யா (28) என்பது தெரியவந்தது.

  தூத்துக்குடியை சேர்ந்த இவர் திருமணமானவர். கணவர் பெயர் ஜெரோம். பிறந்து 10 மாதமே ஆன தனது குழந்தையை தொலைத்து விட்டார். எனவே கணவருடன் பிரச்சினை ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து தாய் வீடு திரும்பி விட்டார்.

  இதற்கிடையே, மனநலம் பாதித்து இருந்தால், அவரது பெற்றோர் இங்குள்ள ஆசிரமத்தில் சேர்த்ததும் தெரியவந்தது. மேலும், சுகன்யாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். எனவே தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


  Next Story
  ×