என் மலர்
செய்திகள்

திருப்பத்தூரில் நகை அடகுக்கடை உரிமையாளர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை
திருப்பத்தூரில் நகை அடகுக்கடை உரிமையாளர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மேகவண்ணன் (வயது 63). இவர் திருப்பத்தூரில் நகை அடகுக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி கல்யாணி.
இவர்களது மகன்கள் அமெரிக்காவில் உள்ளனர். அவர்களை பார்க்க செல்ல மேகவண்ணனும், கல்யாணியும் விரும்பினர். இதற்கான விசா எடுப்பதற்காக 2 பேரும் நேற்று சென்னைக்கு சென்றனர்.
அவர்களது வீடு பூட்டி கிடந்தது. அவர்கள் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டுக்குள் இருந்த பீரோவையும் அவர்கள் உடைத்தனர்.
அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story