என் மலர்

  செய்திகள்

  நாட்டறம்பள்ளி அருகே புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை
  X

  நாட்டறம்பள்ளி அருகே புதுப்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டறம்பள்ளி அருகே திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்ட கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  நாட்டறம்பள்ளி:

  நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (வயது 24), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராதா (22). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது.

  திருமணத்துக்கு பிறகு பிரகதீஸ்வரன் சரிவர வேலைக்கு செல்லவில்லை. குடும்ப செலவுக்கு போதிய பணம் இல்லாத காரணத்தினால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

  இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராதா வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த ராதாவை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ராதாவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் திருப்பத்தூர் சப்-கலெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×