என் மலர்

  செய்திகள்

  48-வது ஆண்டு நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் 3-ந் தேதி சசிகலா அஞ்சலி
  X

  48-வது ஆண்டு நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் 3-ந் தேதி சசிகலா அஞ்சலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணாவின் 48-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அஞ்சலி செலுத்த இருப்பதாக கட்சித் தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
  சென்னை:

  அண்ணாவின் 48-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அஞ்சலி செலுத்த இருப்பதாக கட்சித் தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

  அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

  அண்ணாவின் 48-வது ஆண்டு நினைவு நாளான 3-2-2017 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

  இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்ட கழகச் செயலாளர்களும், கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள்.

  தமிழ்நாடு மற்றும் கட்சியின் அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 3-2-2017 அன்று ஆங்காங்கே அண்ணாவினுடைய உருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
  Next Story
  ×