search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொளத்தூர் அருகே தொழிலாளி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
    X

    கொளத்தூர் அருகே தொழிலாளி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொளத்தூர் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள மூலக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி தனலட்சுமி. இருவரும் கூலி தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்றனர். பின்னர் மாலையில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 9 பவுன் தங்க நகையை காணவில்லை. வேலைக்கு சென்ற சமயத்தில் இவற்றை யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு திருடி சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×