என் மலர்

  செய்திகள்

  முத்துப்பேட்டையில் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்
  X

  முத்துப்பேட்டையில் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்துப்பேட்டையில் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த அ.தி.மு.க. பிரமுகரை தாக்கிய மர்ம கும்பலை போலீசார் துப்பாக்கியை காட்டி விரட்டியடித்தனர்.

  முத்துப்பேட்டை:

  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள மங்கலூர் காமண்டியடியில் அதே பகுதியை சேர்ந்த மகேஷ், ஜெயச்சந்திரன் மற்றும் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர்.

  அப்போது அவ்வழியாக சென்ற முருகேஷ் என்பவருக்கும் மகேஷ் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முருகேசுக்கு ஆதரவாக வந்தவர்கள் தாக்கியதில் ஜெயச்சந்திரன் காயம் அடைந்தார். தாக்குதல் குறித்து தெரிந்து கொள்வதற்காக முத்துப்பேட்டைக்கு வந்த அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் குணசேகரனை ஒரு கும்பல் தாக்கியது.

  அவர்களிடமிருந்து தப்பிய குணசேகரன் அருகில் இருந்த போலீஸ நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவரை துரத்தி வந்த கும்பலும் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்கியது. இதனால் பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அக் கும்பலை போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறும் படி கூறினார்கள். ஆனால் கும்பல் கலைந்து செல்லவில்லை.

  இதனால் போலீசார் இங்கிருந்து செல்லாவிட்டால் சுட்டுவிடுவோம் என்று துப்பாக்கியை காட்டி எச்சரித்தனர். அதன் பின்னர் அக் கும்பல் அங்கிருந்து சென்றது. இந்த நிலையில் காயம் அடைந்த ஜெயச்சந்திரன் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

  சம்பவம் குறித்து போலீசார் கூறும் போது, தகராறில் ஈடுபட்ட அனைவரும் உறவினர்கள். போதையில் இருந்த அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இரு தரப்பினரும் புகார் கொடுக்காததால் வழக்கு பதிவு செய்யவில்லை என்றனர்.

  இது குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்

  போலீஸ் நிலையத்துக்குள் அ.தி.மு.க. பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×