search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலையில் நாளை மினி மராத்தான் போட்டி
    X

    உடுமலையில் நாளை மினி மராத்தான் போட்டி

    உடுமலையில் எஸ்.வி.மில் மைதானத்தில் நாளை (29-ந்தேதி) காலை மினி மராத்தான் போட்டி தொடங்குகிறது.

    உடுமலை:

    உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக்குலேன் பள்ளி (ஆர்.ஜி.எம்.). நிர்வாகத்தினர் ஆரண்யா அறக்கட்டளையின் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உடுமலை சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி, மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் 3-வது ஆண்டு மினி மராத்தான் உடுமலை ரோட்டில் உள்ள எஸ்.வி. மில் மைதானத்தில் நாளை (29-ந்தேதி) காலை தொடங்குகிறது.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் அனைவருக்கும் போட்டி தொடங்குவதற்கு முன்பு உடல் தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர் என்று அறக்கட்டளையினர் தெரிவித்தனர். 5 கி.மீட்டர் மற்றும் 10 கி.மீட்டர் என இரு தூரங்களில் மராத்தான் போட்டி நடக்கிறது.

    போட்டிகளில் ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு முதல் 10 பரிசுகள் வரை வழங்கப்பட உள்ளது. பந்தய தூரத்தை நிறைவு செய்பவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது. பரிசுளை ஆனைமலை புலிகள் காப்பக சரணாலயம் சார்பாக முதன்மை வனக்காப்பார் கணேசன் வழங்குகிறார்.

    ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் நந்தினி ரவீந்திரன், ரவீந்திரன், கார்த்திகேயன், ஆலோசகர் பத்மா, சுருதி கருணாநிதி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×