என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பெண் பூ வியாபாரியிடம் நகை பறிக்க முயற்சி: வாலிபர் கைது
By
மாலை மலர்28 Jan 2017 3:03 PM GMT (Updated: 28 Jan 2017 3:03 PM GMT)

முகவரி கேட்பதுபோல் நடித்து பெண் பூ வியாபாரியிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 54). இவரது மனைவி கீதா (வயது 50). இவர்கள் சர்ச் தெரு சந்திப்பில் பூக்கடை நடத்தி வருகிறார்கள்.
நேற்று கீதா பூக்கடையை பூட்டிவிட்டு கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் கீதாவிடம் முகவரி கேட்பதுபோல் பேசிக் கொண்டிருந்தார்.
திடீரென அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கீதாவின் கழுத்தில் கிடந்த 5 1/2 பவுன் செயினை பறிக்க முயற்சி செய்தார்.
இதில் சுதாரித்துக் கொண்ட கீதா திருடன், திருடன் என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் கிரேசியஸ், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் விஷ்ணு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் கத்தியை காட்டி மிரட்டியது மதுரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story
×