என் மலர்

  செய்திகள்

  விளாத்திகுளத்தில் இளம்பெண் தற்கொலை
  X

  விளாத்திகுளத்தில் இளம்பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விளாத்திகுளத்தில் வீட்டு வேலை செய்யாமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை, தாய் சத்தம் போட்டுள்ளார். இதில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
  விளாத்திகுளம்:

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரநகரை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகள் ரெபேக்கா (வயது 17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

  கடந்த மாதம் வேலை பிடிக்கவில்லை என்று கூறி நின்று விட்டாராம்.
  இந்நிலையில் நேற்று ரெபேக்கா வீட்டு வேலை செய்யாமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய் சத்தம் போட்டுள்ளார். இதில் மனமுடைந்த ரெபேக்கா வீட்டில் இருந்த `ஹேர்டை'யை குடித்து மயங்கி விழுந்தார்.

  அவரை மீட்டு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரெபேக்கா இறந்தார். இது குறித்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×