என் மலர்
செய்திகள்

வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த கண்டெய்னர் லாரி
வேடசந்தூர் அருகே இன்று 4 வழிச்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த கண்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேடசந்தூர்:
கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி கண்டெய்னர் லாரி இன்று வந்து கொண்டிருந்தது. வேடசந்தூர் அய்யர்மடம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் தடுப்பு கம்பிகளை மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் உடனே நிறுத்தப்பட்டன. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
மற்ற வாகன ஓட்டுனர்கள் லாரி டிரைவரை சத்தம்போடவே அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வந்து சாலையின் நடுவே கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் திண்டுக்கல்-கரூர் மெயின்ரோட்டில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story