என் மலர்

  செய்திகள்

  காதல் மனைவியை தவிக்க விட்டு கள்ளக்காதலியுடன் சென்ற டிரைவர்: போலீசில் புகார்
  X

  காதல் மனைவியை தவிக்க விட்டு கள்ளக்காதலியுடன் சென்ற டிரைவர்: போலீசில் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதல் மனைவியை தவிக்க விட்டு கள்ளக்காதலியுடன் ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி போலீஸ் சரகம் ஆத்தங்கரைபட்டியை சேர்ந்தவர் அனிதா. இவர், 7 ஆண்டுகளுக்கு முன்பு அபிலாஷ் என்பவரை காதல் திருமணம் செய்தார்.

  சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அபிலாஷ் டிரைவராக வேலை பார்த்ததால் மனைவியுடன் சென்னை சென்று விட்டார். தற்போது அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  இந்த நிலையில் சொந்த ஊர் வந்த அனிதா, கூமாபட்டி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சென்னையில் தங்கள் வீட்டின் அருகே வசித்த விஜயகாந்த் மனைவி அனிதாவுக்கும், தனது கணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை தான் கண்டித்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

  இந்த சூழலில் கணவர் அபிலாஷ், 2 குழந்தைகள் மற்றும் பக்கத்து வீட்டு அனிதாவுடன் தலைமறைவாகி விட்டார். அவர்களை எங்கு தேடியும் காணவில்லை. அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

  இதுகுறித்து கூமாபட்டி போலீசார் விசாரணை நடத்தி அபிலாஷ், கள்ளக்காதலி அனிதா, அஸ்வதி, ராஜேஷ், ரகுராம், சந்திரன், முருகன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  Next Story
  ×