என் மலர்

    செய்திகள்

    பா.ஜனதா எம்.பியை கண்டித்து மகிளா காங்கிரஸ் போராட்டம்
    X

    பா.ஜனதா எம்.பியை கண்டித்து மகிளா காங்கிரஸ் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தரபிரதேச மாநில பா.ஜனதா எம்.பி வினய் கத்தியார், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மகள் பிரியங்கா காந்தி பற்றி தெரிவித்த கருத்தை கண்டித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் சத்திய மூர்த்தி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சென்னை:

    உத்தரபிரதேச மாநில பா.ஜனதா எம்.பி வினய் கத்தியார், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மகள் பிரியங்கா காந்தி பற்றி தெரிவித்த கருத்தை கண்டித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் சத்திய மூர்த்தி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமை தாங்கினார். சத்திய மூர்த்தி பவனில் இருந்து ஊர்வலமாக வந்த மகிளா காங்கிரசார் வினய் கத்தியார் எம்.பியை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். அவரது கொடும்பாவி படங்களை எரித்து போராட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி பேசியதாவது:-

    பிரியங்கா காந்தி பற்றி பா.ஜனதா எம்.பி வினய் கத்தியார் இழிவாக பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் உரிமையை காப்பாற்ற நாங்கள் போராடுவோம். வினய் கத்தியார் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும்.

    காங்கிரஸ் மூழ்குகிற கப்பல் அல்ல. நீர்மூழ்கி கப்பல் போன்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவி சுதா, சுமதி அன்பரசு, ராணி ராஜேந்திரன், ஆலிஸ், மைதிலி, கலைச்செல்வி, சுசீலா, சரஸ்வதி நாலடியார் மற்றும் முகமது சித்திக், அகரம் கோபி, ஹென்றி, கொளத்தூர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வினய் கத்தியார் எம்.பிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துஉள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எம்.பி பிரியங்கா காந்தியின் தீவிர பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. வினய் கத்தியார் இழிவான முறையில் விமர்சனம் செய்துள்ளார். பா.ஜ.க.வில் பிரசாரத்திற்காக சினிமா நட்சத்திரங்களும், அழகான பெண்களும் அதிகமாக உள்ளதாக கூறி தமது சொந்த கட்சியைச் சேர்ந்த பெண்களையே கேவலப்படுத்தி, அவமானப்படுத்தியுள்ளார். பெண் இனத்தையே இழிவுபடுத்தும் இக்கருத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல் பெண்கள் அனைவரும் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நாட்டு மக்கள் அனைவராலும் மனமுவந்து ஏற்றுக் கொள்கிற பிரியங்கா காந்தி மீதான பா.ஜ.க.வினர் விமர்சனத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×