என் மலர்

  செய்திகள்

  கம்பம் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 இளம்பெண்கள் மாயம்
  X

  கம்பம் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 இளம்பெண்கள் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கம்பம் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  தேவாரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் மகள் மதுமிதா (வயது 19). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுமிதா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

  இது குறித்து அவரது தந்தை தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி மாயமானாரா? அல்லது காதல் பிரச்சினையில் ஓட்டம் பிடித்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கம்பம் அருகில் உள்ள கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி ஈஸ்வரி (20). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ஈஸ்வரி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் முருகன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×