என் மலர்

  செய்திகள்

  வண்ணாரப்பேட்டையில் வீட்டில் போதை பாக்கு தயாரிப்பு: 2 பேர் கைது
  X

  வண்ணாரப்பேட்டையில் வீட்டில் போதை பாக்கு தயாரிப்பு: 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வண்ணாரப்பேட்டையில் வீட்டில் போதைப் பாக்கு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ எடையுள்ள சிறிய போதை பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  ராயபுரம்:

  வண்ணாரப்பேட்டை நாராயணப்பா தோட்டத்தில், ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘மாவா’ எனப்படும் போதைப்பாக்கு (பான் குட்கா) தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  அதை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு போதை பாக்கு தயாரித்து அவற்றை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து வட சென்னையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

  அதை தொடர்ந்து ஆரிப் (45), மோகன் (40) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ எடையுள்ள சிறிய போதை பொருள் பாக்கெட்டுகள், மேலும் அவை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  மேலும், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன. வண்ணாரப்பேட்டை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Next Story
  ×