என் மலர்

  செய்திகள்

  எண்ணூர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதல்
  X

  எண்ணூர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் இந்த விபத்து நடந்தது.
  பொன்னேரி:

  ஈரானில் இருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு கியாஸ் ஏற்றிக்கொண்டு பி.டபிள்யூ. மேட்டிள் என்ற கப்பல் வந்தது. அந்த கப்பல் எண்ணூர் துறைமுகத்தில் குழாய்கள் மூலம் கியாசை இறக்கிவிட்டு ஈரானுக்கு புறப்பட்டது.

  அப்போது மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூர் துறை முகத்துக்கு டாங்க் காஞ்சீபுரம் என்ற கப்பல் வந்து கொண்டிருந்தது.

  எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் சரக்கு கப்பல் டேங்கில் இருந்து டீசல் கசிந்து கடலில் கலந்ததாக தகவல் பரவியது.

  இதையடுத்து கடலோர காவல்படையினர் ஹெலி காப்டரில் கப்பல்கள் மோதிய இடத்துக்கு சென்றனர். ஹெலிகாப்டரில் பறந்த படியே ஆய்வு செய்தனர். பின்னர் டீசல் கசியவில்லை என்பதை உறுதி செய்தனர்.

  அதன் பிறகு கவிழ்ந்த கப்பலை தூக்கி நிறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு கப்பல் நிலை நிறுத்தப்பட்டது. கப்பல் மோதிக்கொண்டது எப்படி என்பது பற்றி உயர் அதிகாரிகள் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  Next Story
  ×