என் மலர்

  செய்திகள்

  மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலைவீச்சு
  X

  மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
  மதுரை:

  மதுரை எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் பாண்டி (வயது 67). இவரது மகனுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்று மதுரை ஆண்டார் கொட்டாரத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது67), மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியை சேர்ந்த ஆதித்யஞானம், இலந்தை குளத்தை சேர்ந்த பொன்னையன் ஆகியோர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

  இதை நம்பிய பாண்டி, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2 தவணையாக ரூ. 5 லட்சத்தை 3 பேரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.மாதங்கள் பல ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

  இதுகுறித்து பாண்டி, திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×