என் மலர்

  செய்திகள்

  குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத கடைகள்-ஓட்டல்கள் மீது வழக்கு: அதிகாரிகள் நடவடிக்கை
  X

  குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத கடைகள்-ஓட்டல்கள் மீது வழக்கு: அதிகாரிகள் நடவடிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத கடைகள் மற்றும் ஓட்டல்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  மதுரை:

  மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சரவணன், துணை ஆணையர் ராதாகிருஷ்ணபாண்டியன் ஆகியோரது ஆலோசனையின்படி, மதுரை தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தி தலைமையில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்கள் குடியரசு தினத்தன்று ஆய்வு மேற்கொண்டனர்.

  குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்கப்படாமல் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமானால் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முன்கூட்டிய படிவம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். அவ்வாறு படிவம் அனுப்பத்தவறிய  மதுரையில் 44 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 47 ஓட்டல்கள் மற்றும் 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது மொத்தம் 37 வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும்.

  மேலும் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது  3 நாட்களுக்குள் மாற்று விடு முறையை அனைத்து நிறுவனங்களும் சட்டப்படி வழங்க வேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் கோர்ட்டு  நடவடிக்கை எடுக்கப்படும்.

  மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு)சாந்தி தெரிவித்தார்.
  Next Story
  ×