search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனுமதியின்றி மது விற்றதாக 35 பேர் கைது
    X

    குமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனுமதியின்றி மது விற்றதாக 35 பேர் கைது

    குடியரசு தினத்தையொட்டி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குடியரசு தினத்தை யொட்டி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    களியக்காவிளை பகுதியில்  சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் சோதனை மேற்கொண்டார். அப்போது பணங்காலை பகுதி யில் மதுவிற்றதாக ரிச்சார்டு (வயது 40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 11 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் பகுதியில் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் மேற் கொண்ட சோதனையில் அனுமதியின்றி மது விற்றதாக வேலப்பன் (60), மகாலிங்கம் (35), ராதாகிருஷ்ணன் (32), பிரின்ஸ் (57) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

    கோட்டார் சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷ் மேற் கொண்ட சோதனையில் அனுமதியின்றி மதுவிற்றதாக கணபதி (36) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

    குளச்சலில் முருகன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் சோதனை மேற் கொண்டதில் அனுமதியின்றி மது விற்றதாக கோலப்பன் (24), திரவியம் (30), மகராஜ பிள்ளை (34), மாதவன் (43) ஆகியேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் தக்கலை பகுதியில் நடந்த சோதனையில் அஜித்குமார் (37), ஜெபா (30), அந்தோணிராஜ் (65), அமலா (65), ரமேஷ் (30) ஆகியோர் அனுமதியின்றி மது விற்றதாக கைது செய்யப்பட்டு அவர்களிடம்  இருந்து 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் மதுவிலக்கு போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்றதாக  19 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×