என் மலர்

  செய்திகள்

  களியக்காவிளை அருகே முதியவர் பிணம்: போலீசார் விசாரணை
  X

  களியக்காவிளை அருகே முதியவர் பிணம்: போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  களியக்காவிளை திட்டங்கிணாவிளை பேரூந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  களியக்காவிளை:

  களியக்காவிளை திட்டங்கிணாவிளை பேரூந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் சிவப்பு கலர் சட்டை மற்றும் லுங்கி அணிந்திருந்தார்.

  திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×