என் மலர்
செய்திகள்

பனிச்சரிவில் சிக்கி தஞ்சை ராணுவ வீரர் பலி - சோகத்தில் மூழ்கிய கிராமம்
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ஒரத்தநாட்டை சேர்ந்த ராணுவ வீரர் இறந்தார். இதனால் அவரது சொந்த ஊர் கிராம மக்களை சோகத்தை ஆழ்த்தி உள்ளது.
தஞ்சாவூர்:
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ஒரத்தநாட்டை சேர்ந்த ராணுவ வீரர் இறந்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூரை சேர்ந்தவர் பூமிநாதன். கூலித் தொழிலாளி. இவரது மகன் இளவரசன் (27).
இவர் கடந்த 4ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தார். குரோஷ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 14 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
அதில் இளவரசனும் ஒருவர் ஆவார். அவர் இறந்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதறி துடித்தனர். மேலும் கண்ணந்தங்குடி கீழையூர் கிராமமும் சோகத்தில் மூழ்கியது.
பனிச்சரிவில் இறந்த ராணுவ வீரர் இளவரசன் உடல் வருகிற திங்கட்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. அங்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

Next Story