search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவேல மரங்களை அழிக்க அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும்: கலெக்டர் நடராஜன்
    X

    கருவேல மரங்களை அழிக்க அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும்: கலெக்டர் நடராஜன்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டும். அதற்காக அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்:

    மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரான் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

    கழிப்பறைக் கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், மகளிர் குழு கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு நல்கிட கோருதல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், ஒருங்கிணைந்த சுகாதார வளாக செயல்பாடு குறித்து விவாதித்தல், ஊராட்சி அளவில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், தனிநபர் இல்லக் கழிப்பறை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை ஈடுபடுத்துதல், டெங்கு காய்ச்சல் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் படித்து காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு மாவட்ட கலெக்டர் நடராஜன் பேசியதாவது:-

    கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவதன் மூலம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளதா என்பதனை அறிய முடியும்.

    கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் வெளிப்புறங்களில் மலம் கழிப்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும், சுகாதாரமான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்பதற்காவும் தமிழக அரசு ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கிராமத்திற்கு தேவையான தனிநபர் கழிப்பிட வசதி செய்து வருகின்றது.

    இந்த கிராமம் ரூ.20 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா உருவாக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. அம்மா பூங்கா அமைக்கப்பட்டவுடன் அம்மா உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படவுள்ளது. கிடைக்கின்ற குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், முக்கியமாக மூடி பயன்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் உள்ள ஊரகப்பகுதிகளில் வளரும் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டும். அதற்காக அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, கோட்டாட்சியர் ராம்பிர தீபன், வட்டாட்சியர் சுகுமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×