search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே டிராக்டர் மோதி எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி
    X

    திண்டுக்கல் அருகே டிராக்டர் மோதி எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திண்டுக்கல் அருகே டிராக்டர் மோதி எல்லை பாதுகாப்பு படை வீரர் பலியானார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள அஞ்சுக்குழிப்பட்டியை சேர்ந்தவர் ராஜீவ். (வயது 27). இவர் அசாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி வனிதா.

    கடந்த 1 மாதத்துக்கு முன்பு வனிதாவுக்கு குழந்தை பிறந்தது. தனது குழந்தையை பார்ப்பதற்காக ராஜீவ் சொந்த ஊருக்கு வந்திருந்தார். மேட்டுக்கடையில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் அடிபட்டது. படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து டிராக்டர் டிரைவர் ரவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×