என் மலர்

  செய்திகள்

  சேலம் சிவதாபுரம் பகுதியில் மாணவர் விபத்தில் பலி
  X

  சேலம் சிவதாபுரம் பகுதியில் மாணவர் விபத்தில் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் சிவதாபுரம் பகுதியில் மாணவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சேலம்:

  சேலம் அரிசிபாளையம் ஆர்டி.பால் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சூர்யா (வயது 20). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

  சிவதாபுரம் மாணிக்க கவுண்டர் தெரு பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறியதால் சூர்யா கீழே விழுந்தார்.

  அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்ட சூரியா சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

  விபத்து குறித்து தகவல் அறிந்தததும் சேலம் மாநகர போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் பலியான மாணவரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரிக்கு சென்ற மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர்.

  பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×