என் மலர்

    செய்திகள்

    பழைய வண்ணாரப்பேட்டையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.82 ஆயிரம் கொள்ளை
    X

    பழைய வண்ணாரப்பேட்டையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.82 ஆயிரம் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பழைய வண்ணாரப்பேட்டையில் ஓடும் பஸ்சில் ரூ.82 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராயபுரம்:

    கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி நாராயிணி (50). இவர்களது மகள் தங்கசாலையில் வசித்து வருகிறார்.

    நாராயிணி நேற்று தனது மகளை பார்ப்பதற்காக கொளத்தூரில் இருந்து தங்க சாலைக்கு செல்லும் பஸ்சில் சென்றார்.

    மகளுக்கு நகை செய்வதற்காக ரூ.82 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து எடுத்து சென்றார்.

    தங்கசாலை மேம்பாலம் அருகே இறங்கினார். பின்னர் தனது பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.82 ஆயிரம் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து நாராயிணி பழைய வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஓடும் பஸ்சில் ரூ.82 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×