என் மலர்

  செய்திகள்

  பன்றி காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: அரிமளத்தில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சிறப்பு முகாம்
  X

  பன்றி காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: அரிமளத்தில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சிறப்பு முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பன்றி காய்ச்சல் பாதிப்பு எதிரொலியால் அரிமளத்தில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சிறப்பு முகாம் நடைபெற்றது.

  அரிமளம்:

  புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சிரயம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்டர் அமல்ராஜ் இவருடைய மகள் ஜனனிக்கு (வயது 7) காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

  டாக்டர்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் பன்றி காய்ச்சல் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் மருத்துவ இணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி ஆகியோர் வழி காட்டுதல்படி அரிமளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துராஜா தலைமையில் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

  இந்த மருத்துவ முகாம் மூலம் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. பன்றி காய்ச்சல் ஒரு வகையான வைரஸ் மூலம் பரவுகிறது. மேலும் பன்றி காய்ச்சல் தொற்று ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அரிமளம் பேரூராட்சி பகுதிகளில் தன் சுத்தம், கைகளை கழுவி சாப்பிடுதல், இருமும் போதும், தும்முபோதும் வாயில் கைகளை வைத்து கொண்டு இரும வேண்டும், வீட்டை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

  இந்த சிறப்பு 7 மருத்துவ முகாம்களில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

  Next Story
  ×