search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

    சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,136-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 600 ஆக இருந்தது. மறுநாள் 25-ந்தேதி பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.22 ஆயிரத்து 424-க்கு விற்றது.

    நேற்று மீண்டும் ரூ.108 குறைந்து ரூ.22 ஆயிரத்து 336 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு மேலும் ரூ.200 குறைந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 136 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,769-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.360 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 75 ஆகவும், ஒரு கிராம் ரூ.44 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×