என் மலர்

  செய்திகள்

  குப்பை அள்ளுவதற்கு பேட்டரி ஆட்டோக்கள்
  X

  குப்பை அள்ளுவதற்கு பேட்டரி ஆட்டோக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் மாநகரில் குறுகிய வீதிகளில் சென்று குப்பை அள்ளுவதற்கு வசதியாக பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்கள் பயன்படுத்தப்படுகிறது.
  திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலங்களுடன் 60 வார்டுகளை கொண்டுள்ளது. 2-வது, 3-வது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு விடப்பட்டுள்ளது. 1-வது மற்றும் 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணிகளை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். 60-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

  லாரிகள் செல்ல முடியாத சில குறுகிய வீதிகளில் குவியும் குப்பைகளை அகற்றுவதற்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோக்களை குப்பை அள்ளுவதற்கு பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

  ஒரு பேட்டரி ஆட்டோவின் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். மொத்தம் 50 பேட்டரி ஆட்டோக்கள் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்கள் சோதனை அடிப்படையில் மாநகராட்சி வீதிகளில் குப்பை அள்ளும் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆட்டோவில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்தால் போதும். எரிபொருள் பயன்படுத்த வேண்டியது இல்லை. ஒரு ஆட்டோவில் டிரைவருடன் மேலும் 2 பேர் செல்ல முடியும். ½ டன் எடையுள்ள குப்பைகளை ஆட்டோவில் ஏற்றி அப்புறப்படுத்தும் வசதி உள்ளது.

  இந்த பேட்டரி ஆட்டோக்கள் அடுத்த வாரம் முதல் 1-வது மற்றும் 4-வது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 
  Next Story
  ×