என் மலர்

  செய்திகள்

  பையர்நாயக்கன்பட்டியில் புதிய பாலம் கட்டும் பணி: அரூர் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
  X

  பையர்நாயக்கன்பட்டியில் புதிய பாலம் கட்டும் பணி: அரூர் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரூர், பையர்நாயக்கன்பட்டியில் ரூ.1 கோடியே 87 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணியை அரூர் எம்.எல்.ஏ., ஆர்.ஆர்.முருகன் தொடங்கி வைத்தார்.
  தர்மபுரி மாவட்டம் அரூர் முதல் கோட்டப்பட்டி வரை செல்லும் சாலையில் பையர்நாயக்கன்பட்டி சந்தை அருகே காட்டாற்று பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் மிகவும் குறுகலாகவும், ஒரு வழிப்பாதையாகவும் இருப்பதால் இந்த பகுதியில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இங்கு விபத்து அபாயமும் அதிகரித்து வந்தது.

  இந்த நிலையில் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலையை அகலப்படுத்தி புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அரூர் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.முருகனிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  இதைத்தொடர்ந்து பையர்நாயக்கன்பட்டியில் ரூ.1 கோடியே 87 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வநம்பி தலைமை தாங்கினார். அரூர் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.முருகன் கலந்துகொண்டு பாலப்பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன், பொறியாளர் மணிவண்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னரசு, சாமிக்கண்ணு, ஒப்பந்ததாரர் வேடியப்பன், தரணிராஜ், தேவன்,சேட்டு, சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
  Next Story
  ×