என் மலர்

  செய்திகள்

  இறகு பந்து போட்டி: சாதனை படைத்த மாணவர்களை பாராட்டிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
  X

  இறகு பந்து போட்டி: சாதனை படைத்த மாணவர்களை பாராட்டிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இறகு பந்து போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
  திருச்செந்தூர்:

  தூத்துக்குடி மாவட்ட அளவில் கேலோ இந்தியா நடத்திய ஒற்றையர் பிரிவு இறகு பந்து போட்டியில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் சுரேந்தர், அவரது சகோதரனும், அதேபள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவருமான சுதன் ஆகியோர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர்.

  அதேபோல் மாணவர் சுரேந்தர் ஒற்றையர் பிரிவிலும் முதலிடம் பெற்றார். இவர்கள் இருவரும் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள தமிழ்நாடு அணி வீரர்கள் தேர்வில் கலந்து கொள்கின்றனர்.

   மேலும், அதே பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் சிவவிக்னேஸ்வரன், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்திய அகில இந்திய ஜுனியர் கபடி போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடினார். அந்த மூன்று மாணவர்களையும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

  இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் வசந்தா, உடற்கல்வி ஆசிரியர் ராஜ பெருமாள், ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் மந்திரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணல்மேடு சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் கோமதிநாயகம், வக்கீல்கள் சாத்ராக், கிருபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×