என் மலர்

    செய்திகள்

    கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: லாரி டிரைவர் மீது வழக்கு
    X

    கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: லாரி டிரைவர் மீது வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்கொலைக்கு தூண்டியதாக லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சாந்தி(வயது29). இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரு பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க்காக தற்காலிகமாக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும் பாளை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜா என்பவருக்கும் இடையே பழக்கம் உண்டானது.

    இதனால் ராஜாவும், சாந்தியும் தாழையூத்தில் ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராஜாவுக்கு வேறு இடத்தில் திருமணம் நடைபெற்றது. இதை அறிந்த சாந்தி சீவலப்பேரியில் ராஜாவின் வீட்டுக்கு இதுபற்றி கேட்க சென்றார். அப்போது திடீரென்று அவர் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி சாந்தி சீவலப்பேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சாந்தியை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×