என் மலர்

  செய்திகள்

  ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காங்கிரசார் கண்டனம்
  X

  ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காங்கிரசார் கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுரண்டையில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  சுரண்டை:

  சுரண்டை நகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நகர தலைவர் ஜெயபால் தலைமையில் நடந்தது. நாட்டாமை ராஜேந்திரன், ராமராஜ், மாவட்ட கலை இலக்கிய பிரிவு துணைத் தலைவர் ஆசிரியர் ஜெயராஜ், மாரியப்பன், பால்(எ) சண்முகவேல், நகர செயலாளர்கள் சௌந்தர், சிங்கராஜ், சேர்மன் அருணாசலம், பரமசிவன், மகாராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பொருளாளர் அண்ணாத்துரை வரவேற்றார். ரத்தினநாடார், செல்வம், கந்தையா, சுப்பையா,  விஸ்வா, முருகேசன், சமுத்திரம் கொத்தனார், பன்னீர்செல்வம்,  போஸ், ஜெகன், மாரிகிருஷ்ணன், ஜெயச்சந்திரன். கனி மாரியப்பன், மணிகண்டன், டுவின்ஸ் கோபால், இளைஞர் காங்கிரஸ் ரமேஷ், வைரமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார தலைவர் பால்துரை, மாவட்ட பொருளாளர் பழனி நாடார் ஆகியோர் சிறப்புறையாற்றினர்.

  கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர சட்டம் கோரி அமைதியாக காந்திய வழியில் போராடிய மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையை கண்டிப்பது, ஒரே இரவில் திடீரென ரூபாய் 500, 1000 செல்லாது என அறிவித்து பொதுமக்களை சிரமத்தில் ஆழ்த்தியதுடன் அடித்தட்டு மக்களையும் சிறு, குறு தொழில்களையும் வியாபாரிகளையும் பாதிப்புக்குள்ளாக்கிய மோடி அரசை கண்டிப்பது.

  நீட் தேர்வை ரத்து செய்ய கோருவது. வறட்சியை கருத்தில் கொண்டு வீ.கே. புதூர் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது  என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  முடிவில் அண்ணாமலை நன்றி கூறினார்.
  Next Story
  ×