என் மலர்

  செய்திகள்

  100 பிராந்தி பாட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
  X

  100 பிராந்தி பாட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோபி அருகே 100 பிராந்தி பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

  கோபி:

  கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூர் என்ற இடத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40)

  இவரது வீட்டில் பிராந்தி பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதையொட்டி போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

  அப்போது அங்கு அட்டைபெட்டிகளில் இருந்த 100 பிராந்தி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  குடியரசு தின விழாவையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அதிக விலைக்கு விற்பதற்கு பிராந்தி பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக முருகன் கூறினார். இதையொட்டி முருகனை போலீசார் கைது செய்தனர்.

  Next Story
  ×