என் மலர்

    செய்திகள்

    வாடிப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது
    X

    வாடிப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வாடிப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடிடை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    வாடிப்பட்டி:

    வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பஸ்நிறுத்தம் முன்பு நின்றுகொண்டிருந்த அரசு சிட்டி பஸ் மற்றும் அதன் பின்னால் வந்த மதுரையிலிருந்து திண்டுக்கல் வந்த அரசுபஸ் இரண்டிலும் பின்புறத்தில் மர்மநபர் கற்களை வீசி கண்ணாடியை உடைத்தார்.

    இது சம்மந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில் அந்தபகுதியில் போலீ சார் வாகனசோதனை செய்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவாலிபர் போலீசாரை பார்த்ததும் ஓடினான். உடனே அவனை விரட்டிபிடித்தனர். விசாரணையில் செம்புக்குடிபட்டி வடக்குதெருவை சேர்ந்த நந்து என்ற நாகரத்தினம் (வயது 19) என்று தெரியவந்தது.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக ஒப்புக்கொண்டார். இதுசம்மந்தமாக நாகரத்தினத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    Next Story
    ×