என் மலர்
செய்திகள்

மதுரையில் அனுமதி பெறாமல் போராட்டம்: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 78 பேர் மீது வழக்கு
அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 78 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை:
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை நடத்தப்பட்டன. இதில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர்கள் மற்றும் சட்ட விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, நன் மாறன் ஆகியோர் முன் அனுமதி பெறாமல், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பெரியார் பஸ் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அவர்கள் உள்பட 78 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story