என் மலர்

  செய்திகள்

  திருவண்ணாமலை அருகே அதிகாரிகள் பிடியில் இருந்து போலி டாக்டர் தப்பி ஓட்டம்
  X

  திருவண்ணாமலை அருகே அதிகாரிகள் பிடியில் இருந்து போலி டாக்டர் தப்பி ஓட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை அருகே அதிகாரிகள் பிடியில் இருந்து போலி டாக்டர் தப்பி ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவின்பேரில், மாவட்ட மருத்துவப்பணிகள் நல இணை இயக்குனர் கிரிஜா தலைமையிலான மருத்துவக்குழுவினர் திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடியில் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்களா? என சோதனை நடத்தினர்.

  அப்போது ஊசாம்பாடி மெயின் சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் போலி டாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.

  இதையடுத்து மருத்துவக் குழுவினர் மருந்து கடையில் சோதனை நடத்தினர். அப்போது மருந்து கடையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் திருவண்ணாமலையை அடுத்த மாதலம்பாடி அக்ரகார தெருவை சேர்ந்த முருகன் (வயது 34) என்பதும், பி.ஏ. படித்துவிட்டு மருந்து கடை வைத்திருப்பதும், கடைக்கு மருந்து வாங்க வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

  அதைத் தொடர்ந்து மருத்துவக்குழுவினர் முருகன் சிகிச்சைக்கு பயன்படுத்திய ஊசி, மாத்திரை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

  பின்னர் மருத்துவக்குழுவினர் முருகனை ஜீப்பில் ஏற்றி போலீசாரிடம் ஒப்படைக்க முயன்றனர். அப்போது திடீரென அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

  இதுதொடர்பாக திருவண்ணாமலை தாலுகா போலீசில் மாவட்ட மருத்துவப்பணிகள் நல இணை இயக்குனர் கிரிஜா புகார் அளித்தார். போலீசார் தப்பி ஓடிய போலி டாக்டர் முருகனை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×